2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை கொண்டுசென்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 27 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்தில் சட்டவிரோமாக அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கால்நடையாக கொண்டுசென்றதாகக் கூறப்படும்  இருவர் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 3 மாடுகளும்  மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளதுடன், 03 மாடுகளையும் மீட்டுள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர்.

உகனப் பிரதேசத்திலிருந்து கல்முனைப் பிரதேசத்திற்கு அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கால்நடையாக கொண்டு சென்றபோதே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .