2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

திராய்க்கேணி தமிழ்கிராமத்திற்கான மின்பிறப்பாக்கி வழங்கி வைப்பு

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் திராய்க்கேணி தமிழ்கிராமத்திற்கான மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவில் இடம்பெற்றது

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய மின்சார அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பையின் நிதியொதுக்கீட்டின் மூலம் இது வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி மற்றும் கிராமிய மின்சார அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா மின்பிறப்பாக்கியை வழங்கி வைத்ததுடன், அமைச்சரின் பொது சனத்தொடர்பு அதிகாரி எம்.எஸ். ஜஃபர், திராய்க்கேணி கோயில் பரிபாலன சபை உறுப்பினர்கள், கிராமசேவை உத்தியோகதர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கிராம மக்களின் பொது வைபவங்கள் மற்றும் அத்திய அவசிய தேவைகளின் பொருட்டு மின் பிறப்பாக்கி ஒன்றின் அவிசியம் தொடர்பில் அவர்களினால் நீண்டகாலமாக இக்கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 



  Comments - 0

  • VALLARASU.COM Monday, 02 December 2013 01:05 PM

    அது சரி 32000க்கு மேல் மக்களின் வாக்குகளை பெற்ற அந்த அரசியல் வாதிகள் இந்த மக்களுக்கு என்னத்தை கிழிக்திருகிறார்கள்..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .