2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
கனகராசா சரவணன்

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 3 தினங்களாக காணாமல் போயிருந்த மண்டானை சுனாமி வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 19 வயதுடைய கூலித் தொழிலாளியான இந்திரன் ரமேஷ் இன்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருக்கோவில் மண்டானை காயத்திரி கோவிலுக்கு பின்னால் உள்ள மரம் ஓன்றில் தொங்கிய நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம்பற்றி தெரியவருவதாவது,

குறித்த இளைஞனை கடந்த 26  ஆம் திகதி அவரது தந்தையார் அடித்து கண்டித்துள்ளார். இதனையடுத்து தந்தையுடன்; கோபித்துக் கொண்டு  வீட்டை விட்டு; சென்றவர் அன்றைய தினம் வீடு திரும்பவில்லை.

காணாமல் போன அவரை உறவினர்கள் தேடிவந்த நிலையில் இன்று பகல் 12.00 மணியளவில் குறித் பிரதேசத்தில் மாடுகளை மேய்பவர் ஒருவர் கற்பாறைகளுக்கு அருகில் உள்ள இத்தி மரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டுள்ளார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் வழங்கினர். அதனையடுத்து பொலிஸார்  சடலத்தை பொலிசார் மீட்டனர்.

இச்சம்பவ இடத்திற்கு சென்ற பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான்ஜ.என்.றிஸ்வான் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .