2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தொழில்சார் தொழில் வல்லுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கிழக்கு மாகாணமட்ட தேசிய நிர்மாணத்துறை தொழில்சார் தொழில் வல்லுநர்களுக்கான  'மகாபிமானி'  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) காலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண நிர்மாணத்துறை சம்மேளன உப தலைவர் ஏ.எல்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண நீர்ப்பாசண திணைக்கள பிரதி பிரதம பொறியியலாளர் யு.எல்.ஏ.நஸார், கல்முனை பிராந்திய கட்டிட நிர்மாண நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம்.ஸஹீர் ஆகியோர் கலந்துகொணடனர்.

இதன்போது, மேசன், தச்சுத்தொழில், நீர்இணைப்பு, மின்னிணைப்பு, தரை ஓடு பதித்தல் போன்ற துறைகளில் திறமையினை வெளிப்படுத்திய தொழில்சார் நிபுணர்களுக்கும் துறைசார் அடிப்படையில் சிறந்த அறுவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தேசீய ரீதியில் கட்டிட ஒப்பந்தக்காரர்களின் மாநாடு இம்மாதம் 5 ஆம் திகதி பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .