2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Kogilavani   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொத்துவில் நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை (1) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்  அவரிடமிருந்து 2-2ஃ1 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளும் மீட்கப்பட்டதாக பொத்துவில் பொலிஸார்
தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை தொடர்ந்து மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் மொனராகலை பிரதேசத்தில் இருந்து பொத்துவில் பிரதேசத்துக்கு விற்பனைக்காக கஞ்சா கொண்டுவந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0

  • VALLARASU.COM Monday, 02 December 2013 01:08 PM

    இது பரவா இல்லை, இப்போ நாட்டில இதை விட பெரிய நாசகார செயல்கள் செய்வதெல்லாம் யார் தெரியுமா..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .