2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நாங்கள் பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல: ஜெனார்த்தன்

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

'பௌத்த மதத்தினையும் புத்தரின் சிலைகளையும் தமிழர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பின் அடையாளமாக தயவுசெய்து மாற்றாதீர்கள். நாங்கள் பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தன் தெரிவித்தார்.

திருகோணமலையில் தொல் பொருளியல் ஆய்வு எனும் பெயரில் தமிழர்களின் காணிகள், வணக்க வழிபாட்டு ஸ்தலங்கள் அபகரிக்கப்படுவதையும், சேதமாக்கப்படுவதையும் கண்டித்து நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'எமது மாகாண சபைக்கு சொந்தமான சுற்றுலா மையங்களை மத்திய அரசிடம் கையளித்து விட்டு இயலாமை மிக்கவர்களாக இருக்கின்றோம்.

கிண்ணியா வெந்நீர் ஊற்று, திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபைக்கு சொந்தமான சுற்றுலாப் பிரதேசம் தொல் பொருளியல் எனும் பெயரில் மத்திய அரசின் தொல் பொருளியல் திணைக்களத்திற்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சுற்றுலாப் பிரயாணிகளுக்கு 10 ரூபாவும் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளுக்கு 500 ரூபாவம் கட்டணமாக அறவிடப்படுகின்றது. இந்த டிக்கெட்டில் பாருங்கள் சிங்களத்தில் மட்டுமே பொறிக்கப்பட்டு இருக்கின்றது.

எங்கே எப்போது கிடைத்தது இந்த ஆதாரம் யார் மேற்கொண்டது? இந்த தொல் பொருளியல் ஆய்வு? அதில் எத்தனை பேர் சிங்களவர்கள்? எத்தனை பேர் தமிழர்கள்? அதில் காணப்படுகின்றதா இன விகிதாசாரம் இன்னும் அது ஆய்விற்கு உட்படுத்த முடியவில்லை.

பரவாயில்லை நாங்கள் சட்டத்திற்கு முரணாக செயற்படுபவர்கள் இல்லை. நீங்கள் ஆய்வினை மேற்கொள்கின்றீர்கள்  நாம் தடுக்க வில்லை. ஆனாலும் அச்சுற்றுலா தளத்திற்கான எமது இந்துக்களுக்கு சொந்தமான இந்த பிரதேசத்தின் பராமரிப்புக்கட்டணம் அறவிடும் பொறுப்பினை பிரதேச சபைக்கு பெற்றுத் தாருங்கள் என மிக கனிவோடு கேட்டுக் கொள்கின்றேன்.

அங்கு காணப்படுகின்ற தற்போது புதிதாக கட்டப்பட்ட பௌத்த விகாரை மிக கன்னியமாக பராமரிக்கப்படுகின்ற போதிலும் அங்கு காலம் காலமாக இருந்து வந்த எமது பிள்ளையார் கோயில் இடிக்கப்பட்டமை அது தொடர்பான எவ்வித பேச்சோ நடவடிக்கையோ இல்லாமை எமக்கு பாரிய கவலையாக இருக்கின்றது.

பௌத்த மதத்தினையும் புத்தரின் சிலைகளையும் தமிழர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பின் அடையாளமாக தயவுசெய்து மாற்றாதீர்கள். நாங்கள் பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ எனக்குத் தெரியாது. ஆனாலும் இலங்கையின் தமிழ் பௌத்தர்கள் இருந்ததற்கான வரலாறு நான் வாசித்து அறிந்து இருக்கின்றேன்.

அத்தோடு அங்கே காணப்படும் சிவன் ஆலயம் கவனிப்பற்று மிக மோசமான நிலையில் இருக்கின்றது. அப்பகுதியில் நடைபெறும் கட்டுமான வேலைகளுக்கான பொருட்கள் வைக்கும் இடமாகவும் அது ஒரு களஞ்சிய சாலையாகவும் பயன்படுவது எமது மதத்தினை இழிவு படுத்தும் ஒரு செயலாக நாம் காண்கின்றோம்.

அந்த ஆலயத்தின் அருகிலேயே அங்கு இருக்கும் இராணுவமும் பொலிஸாரும் அவர்களின் அறையாக பாவிக்கின்றார்கள். அது மட்டுமன்றி அங்கு இருந்த விளம்பர பலகைகள் முதலியவற்றில் (இந்து) என்று வரும் சொற்கள் அனைத்திலுமே கறுப்பு நிற மை பூசப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது.

அது ஒரு சுற்றலாத்தளம் அங்கு ஏன் இராணுவம் நிற்க வேண்டும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X