2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / -0001 நவம்பர் 30 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.அஷ்ரப்கான்


சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (06) சாய்ந்தமருது, இளைஞர் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது, இளைஞர் பயற்சி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கிழக்கு மகாண பணிப்பாளர் கே.தவராஜா, அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான யு.எல்.ஏ.மஜீட், ஏ.முபாறக் அலி, ஆங்கில போதனாசிரியர் எம்.பி.நௌஷாட், போதனாசிரியர்களான ஸரிய்யா, முஜீப், பாயிஸ், முனீறா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

சாய்ந்தமருது, இளைஞர் பயிற்சி நிலையத்தின் 8வது பிரிவு மாணவர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சி நிலையம் இலங்கை இளைஞர் சேவை மன்றத்தின் இலங்கையின் 41ஆவது பயிற்சி நிலையமாகும். இது தரப்படுத்தலில் ஆரம்பத்தில் முதல் பத்து இடங்களில் இருந்தாலும் தற்போது  ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளதாக கிழக்கு மகாண பணிப்பாளர் கே.தவராஜா தெரிவித்ததுடன், அதற்காக உழைத்த விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .