எம்.எஸ்.எம். ஹனீபா / 2020 மார்ச் 29 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தடுப்பதற்காக அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பொதுச் சந்தை மறு அறிவித்தல் வரை பொது மக்களின் நலன் கருதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சக்கி இன்று (29) தெரிவித்தார்.
நாளை (30) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது, பொது மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அக்கரைப்பற்று சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பட்டியடிப்பிட்டி பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றில், தற்காலிக சந்தை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூறினார்.
பொது மக்கள் கூடி நிற்காமல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்களுக்குத் தேவையான பொருள்களைக் கொள்வனவு செய்து உடனடியாக திரும்ப வேண்டுமென்றும் அவர் கோரியுள்ளார்.
அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படுகின்றபோது, பொதுச் சந்தைகள், வர்த்தக நிலையங்கள், கடைகள் ஏதும் திறக்கக் கூடாதெனவும் இக்காலப்பகுதியில் பொது மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை தமது வீடுகளுக்கு முன்னால் வருகின்ற நடமாடும் விற்பனை வியாபாரிகளிடம் கொள்வனவு செய்தற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூறினார்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற போது, அவசிய தேவையின்றி பொது மக்கள் எவரும் வீட்டில் இருந்து வெளியேறி, வீதிகளில் நடமாட வேண்டாம் என்றும் ஊரடங்கு உத்தரவை உதாசீனம் செய்து, வீதிகளில் நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களை கைது செய்து, தடுத்து வைப்பதற்கும் பொலிஸ் மற்றும் முப்படையினருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
9 minute ago
25 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
40 minute ago
1 hours ago