Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர், கே.ஏ.ஹமீட்
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் (பட்ஜெட்) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 56ஆவது அமர்வு, தவிசாளருர் ஏ.எல் அமானுல்லா தலைமையில், சபா மண்டபத்தில் இன்று (06) நடைபெற்றது.
இதன்போது வழமையான சபை நடவடிக்கையை தொடர்ந்து, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரால் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டது.
தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொது ஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிக் கட்சி ஆகிய 4 கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தும் 18 உறுப்பினர்களை கொண்ட சபையின் 15 உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், வரவு - செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
2 hours ago