Editorial / 2020 ஜூன் 07 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர சபையின் ஆள்புல எல்லைக்குள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க சுயாதீன குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
அண்மைக்காலமாக கல்முனை மாநகர சபையின் கீழ் உள்ள பகுதிகளில் நிலவும் எல்லைப்பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலொன்று, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், கல்முனை மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் இன்று (07) நடைபெற்றது.
பெரிய நீலாவணைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த கலந்துரையாடலில் தீவிரமாக ஆராயப்பட்டதுடன், மாநகர மேயர் அழைப்பில் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கோவில் பரிபாலன சபையினர் ஊர்பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
எதிர்காலத்தில் இவ்வெல்லை பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒரு சுயாதீன குழு ஒன்றை அமைப்பது எனவும் இக்குழுவின் ஊடாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டச் செயலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடி, தீர்வு பெற்றுக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
37 minute ago
40 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
40 minute ago
48 minute ago
2 hours ago