Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 டிசெம்பர் 09 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ. அச்சுதன், எம்.எஸ்.எம் ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் வியாழக்கிழமை (08) வீசிய கடும் காற்று மற்றும் மழையினால் 08 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 126 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 127 குடும்பங்களைச் சேர்ந்த 454 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்.
உகன பிரதேச செயலாளர் பிரிவில் 83 குடும்பங்களைச் சேர்ந்த 286 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 83 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் நாவிதன்வெளி பிரிவில் 07 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 07 வீடு சேதமடைந்துள்ளதாகவும் அம்பாறை பிரிவில் 21 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு20 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தமன பிரிவில் 05 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 05 வீடு சேதமடைந்துள்ளதாகவும் பதியத்தலாவ பிரிவில் 01 குடும்பம் பாதிக்கப்பட்டு 01 வீடு சேதமடைந்துள்ளதாகவும் திருக்கோவில் பிரிவில் 01 குடும்ப பாதிக்கப்பட்டு 01 வீடு சேதமடைந்துள்ளதாகவும் சம்மாந்துறை பிரிவில் 06 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 06 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் காரைதீவு பிரிவில் 03 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 03 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
திருகோணமலையில்…
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக திருகோணமலையில் மழை, கடும் குளிர், காற்றின் வேகம் என்பன அதிகரித்துள்ளன.
இதனால் திருகோணமலை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லவில்லை. கடந்த இரண்டு நாள்களாக இந்தநிலை நீடிப்பதால் மீன்பிடி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குச் செல்லாது வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago