Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 மார்ச் 24 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கி வரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தை, அம்பாறைக்கு இடமாற்ற வேண்டாமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவர் நேற்று (23) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், சாய்ந்தமருதில் இயங்கி வரும் கிழக்கு மாகாண அலுவலகத்தின் செயற்பாடுகளை தொடர்ந்தும் அதே இடத்தில் இயங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம், சாய்ந்தமருதிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் 2011ஆம் ஆண்டு முதல் இயங்கின்றது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை அம்பாறை நகரத்துக்கு இடமாற்றம் செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்தி, குறித்த அலுவலகம் அவ்விடத்திலையே தொடர்ந்தும் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
20 minute ago
25 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
59 minute ago