Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூன் 03 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ், பாறுக் ஷிஹான், வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு, இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள், நேற்று (02) நண்பகல் இராணுவத்தினரின் உதவியோடு, அக்கரைப்பற்று பொலிஸாரால் மீட்கப்பட்டன.
குறித்த ஆற்றங்கரையோரத்தில் மர்மமான முறையில் பொதியொன்று கிடப்பதைக் கண்ட பொதுமக்கள், அந்த வீதி வழியாகச் சென்ற இராணுவத்திருக்கு தகவல்களை வழங்கினார்கள். இதனையடுத்து, இராணுவத்தினர் அப்பகுதிக்குச் சென்று சந்தேகத்துக்கு இடமான பொதியை பார்வையிட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டப்ளியு.எம்.எஸ்.விஜயத்துங்க தலைமையிலான குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர், குறித்த பகுதிக்கு வருகைதந்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதியிலிருந்து ஆர்.பி.ஜி-04, கிளைமோர் குண்டு-02, 60 மில்லி-02, 81 மெகசின்-12, 81 மெகசின் கைக் குண்டு-02 ஆகிய வெடி பொருள்களை மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை அக்கறைப்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago