Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 ஜூன் 05 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கனகராசா சரவணன்)
அம்பாறையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் நகரசபை முதல்வர் உட்பட அவர்களது உறவினர்களது வீடுகளை தீயிட்ட மற்றும் சேதமாக்கிய சம்பவம் தொடர்பாக, பெண்கள் மற்றும் நீதிமன்றில் சரணடைந்த இருவர் உட்பட 33 பேரை இதுவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட விசாரணைக் குழுவின் பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் பி.பிரகலாதன் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட இந்த மே 9 ஆம் திகதி வன்முறை சம்பவத்தையடுத்து, அம்பாறையிலுள்ள ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசிங்க,விமல திஸாநாயக்கா மற்றும் அவரது மகனின் வீடு, அம்பாறை நகரசபை முதல்வர் ஆகியோரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசேட பொலிஸ் குழுவினை சப் இன்ஸ்பெக்டர் பி.பிரகலாதன் தலைமையில், அமைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், பெண்கள் உட்பட 31 பேரை கைது செய்ததுடன் இருவர் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.
இதில் இதுவரை கைது செய்யப்பட்ட 33 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இவர்கள் பிணையில் வெளிவந்துள்ளதுடன், குறித்த சம்பவத்தில் தீக்கிரையாக்கப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக விலை மதிப்பீட்டு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
32 minute ago