2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஆழ்கடல் மீனவர்கள் தொழிலுக்குத் தயார்

Editorial   / 2020 மே 25 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

அம்பாறை மாவட்டத்தில் அன்மைக்காலமாக நிலவிய சீரற்ற வானிலை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகின்றது.

இதன் காரணமாக, ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

ஆழ்கடலில் ஏற்கெனவே போடப்பட்ட  ஒரு சில மீனவர்களின்  வலைகள், கடல் கொந்தளிப்புக் காரணமாக கடலோடு சென்ற நிலையில், இருக்கின்ற வலைகளை வைத்து தொழிலை ஆரம்பித்துள்ளனர்.

திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த சில மீனவர்கள், தமது வள்ளங்களுடன் நேற்றை தினமும் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றுள்ளனர்.

ஒரு சில மீனவர்கள் பழுதடைந்த தங்களது வலைகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .