Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 மார்ச் 14 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
முள்ளிமலை அண்டிய பகுதியில் ஏற்கெனவே புத்தர் சிலை வைக்க முயற்சிக்கப்பட்ட இடத்துக்கு மீண்டும் தேரர் குழுவினர், நேற்று (13) மாலை வருகை தந்திருந்த நிலையில், தகவலறிந்து அப்பகுதி இளைஞர்கள் அங்கு ஒன்றுகூடியதால் அக்குழுவினர் திரும்பிச் சென்றனர்.
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென தெரிவித்து, பௌத்த பிக்குகளும் சிங்கள இளைஞர்கள் சிலரும் கடும் பாதுகாப்புடன் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு, கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி புத்தர் சிலை வைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதன்போது சம்பவ இடத்துக்கு அப்பகுதி மக்கள் உட்பட உள்ளூர் அரசியல்வாதிகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக தேரர் தலைமையிலான குழு திரும்பிr; சென்றனர்.
இந்நிலையில், மீண்டும் தேரர் தலைமையில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் குழு அவ்விடத்துக்கு நேற்று மாலை வருகை தந்திருந்தது.
இந்நிலையில், அவ்விடத்துக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர், அட்டாளைசேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்ஸில், பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் வெளியிட்ட எதிர்ப்பை அடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
5 minute ago
50 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
50 minute ago
2 hours ago
2 hours ago