Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 நவம்பர் 30 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, காரைத்தீவு பகுதியில் உழவு இயந்திரம் வெள்ள நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி காணாமல் போன மற்றுமொரு மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இன்று (30) காலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 26ஆம் திகதி பிற்பகல் நிந்தவூர் பகுதியில் இருந்து சம்மாந்துறை பகுதிக்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 பேர் நீரில் மூழ்கிய நிலையில், அதில் 8 மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
இந்நிலையில், 5 மாணவர்களின் சடலங்கள் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதோடு, உழவு இயந்திர சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொருவரின் சடலங்களும் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.
இதன்படி, சம்பவத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. R
17 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
52 minute ago