Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 நவம்பர் 15 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
எதிர்காலத்தில் கொவிட்-19 தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளதால், கிழக்கு மாகாணத்தில் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் தடுப்பூசிia பெற்று கொள்ளுமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி nlhக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக், இன்று (15) கேட்டுக்கொண்டார்.
வைத்தியசாலைகள், வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளது.
எனவே, இதுவரை முதலாம் மற்றும் இரண்டாம் தடுப்பூசி பெறாதவர்கள், தத்தமது சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துடன் தொடர்புகொண்டு, தங்களுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அவர் அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தடுப்பு மருந்து ஏற்றும் பணிகள் தொடர்ந்தும் கிரமமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னிலை அரச உத்தியோகத்தர்களுக்கான மூன்றாவது பூஸ்டர் தடுப்பு மருந்து ஏற்றப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, பொதுமக்கள் அவசியமற்ற ஒன்றுகூடல்களை தவிர்த்துக் கொள்ளமாறும், திருமண வைபவங்கள் மற்றும் மரணச் சடங்குகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
4 hours ago