Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ. எல்.எம்.ஷினாஸ்
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை, அங்கு வாழும் மக்களுக்கு பிரச்சினை இல்லாத வகையில் விரைவில் மீள திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்வதற்காக, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று (27) அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, கல்முனை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்றார்.
வடக்கு - கிழக்கில் இருக்கின்ற மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக மீன்பிடித்துறை அமைச்சு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் எனவே, மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் எனவும், டக்ளஸ் கூறினார்.
'ஒலுவில் பிரதேசத்தை பொறுத்தளவில் மீன்பிடி துறைமுகம் வேண்டும் எனக் கூறினாலும் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படுவதால், கடல் அரிப்பு ஏற்படுகிறது என அங்கிருக்கின்ற மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, இரு தரப்பினருக்கும் பாதிப்பில்லாத வகையில் அவர்களுக்கான மாற்று நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அங்கு வாசிப்பவர்களுக்கு பிரச்சினைகள் இல்லாத வகையில், விரைவில் மீன்பிடித் துறைமுகத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
'அதேபோன்று மீனவர்களால் முன்வைக்கப்படுகின்ற மீன்பிடிக்கொள்ளை நவீன இயந்திர படகுகளால் ஏற்படும் பிரச்சினைகள், தொழில்நுட்ப ரீதியாக மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், மீன்பிடித்துறை சம்பந்தமான பயிற்சிக் கூடம் மற்றும் இதர மீன்பிடி தொடர்பாக இங்கு முன் வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்திற்குள் தீர்வை பெற்றுத் தருவேன்.
'கூட்டத்தில் இருந்து தப்புவதற்காக அல்லது ஊடகங்களுக்கு செல்வதற்காக நான் இதைச் சொல்லவில்லை. நீங்கள் நம்பலாம்' என்று, அமைச்சர் தெரிவித்தார
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
4 hours ago