Freelancer / 2022 பெப்ரவரி 18 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாறை - கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாண்டிருப்பு கடற்கரையில் T-56 துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி என்பவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய 14 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவை நேற்று (17)காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கடற்கரைப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் தோட்டாக்களை கண்டெடுத்தனர்.
இதில் 12 தோட்டாக்கள் இதுவரை பயன்படுத்தப்படாதது என்றும் 2 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டவை என்றும் தெரியவந்துள்ளது.
கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
10 minute ago
12 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
20 minute ago