Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 நவம்பர் 17 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்
கல்முனை பிரதான பஸ் நிலையம் முன்பாக, கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நிஸார் தலைமையில் இன்று (17) மாலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை மாநகர பிரதான பஸ் நிலைய அபிவிருத்திக்காக கடலோர பாதுகாப்பு கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மை இராஜாங்க அமைச்சால் 18.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு புனரமைக்கப்படுகின்றது.
எனினும், இந்த பஸ் நிலையமானது பாவனைக்கு உதவாத முறையில் அமைக்கப்படுவதாகவும், தரமின்றி நீண்டநாள் பாவனைக்கு உதவக்கூடிய வகையில் அமைக்கப்படவில்லையென்றும் தெரிவித்தே, சுலோகங்களை ஏந்திக்கொண்டு, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நிஸார், “இந்த அபிவிருத்தித் திட்டமானது வெறும் கண்துடைப்பாக அமைத்துள்ளது. காபட் அல்லது கொங்கிரீட் கொண்டு அமைக்கவேண்டிய பஸ்தரிப்பு நிலையம், சிறுவர் பூங்காக்களுக்கு பதிக்கப்படும் சீமெந்து மற்றும் கற்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றது.
“எனவே, இந்த வேலைகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும். மக்களின் வரிப் பணத்தை வீணாக செலவழிக்க யாரையும் அனுமதிக்க முடியாது” என்றார்.
இதன்போது ஸ்தலத்துக்கு வந்த கல்முனை பொலிஸார், போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன், பொலிஸில் முறையிடுமாறும் அங்கிருந்து களைந்து செல்லுமாறும் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago
4 hours ago