Freelancer / 2023 ஜூன் 11 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை திங்கட்கிழமை (12)ஆம் திகதி திறக்கப்படவுள்ள நிலையில் கதிர்காம யாத்திரிகர்களின் நன்மை கருதியும் ஆலய மகோற்சவம் நடைபெறவுள்ளதை முன்னிட்டும் அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற மாபெரும் சிரமதானப்பணிகளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திணைக்களங்களும் நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றன.

ஆலையடிவேம்பு, திருக்கோவில், காரைதீவு, கல்முனை, நாவிதன்வெளி, களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேச செயலகங்களும் இப்பணியில் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற இப்பணியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago