Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
திருட்டு விசாரணை ஒன்றை சமாளிப்பதற்கு கப்பம் கோரிய போலி சி.ஐ.டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது, மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி, உப்போடை புறநகர் பகுதியில் நகைத் திருட்டுச் சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றிருந்தது.
இந்தத் திருட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபரொருவரை அடையாளம் கண்ட காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொள்வதற்காக சந்தே நபரின் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளனர்.
அவ்வேளை சந்தேகநபர் வீட்டில் இல்லாமையால் மீண்டும் வருவதாகக் கூறி அவ்விடத்தில் இருந்து சென்றுள்ள நிலையில், அதே வீட்டுக்குச் சில நிமிடத்துக்குள் சி.ஐ.டி எனப் பொய் கூறி மற்றுமொரு போலி நபர் சென்றுள்ளார்.
அந்நபர், 10 ஆயிரம் ரூபாய் கப்பமாக தந்தால் குறித்த பிரச்சினையைத் தீர்த்துத் தருவதாக சந்தே நபரின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பம் கோரல் தொடர்பில் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் நேற்று முன்தினம் (05) இரவு சென்ற பொலிஸார், குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் வைத்திருந்த ஓர் அடையாள அட்டையில் கல்வி அமைச்சால் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு, கல்விப் பணிப்பாளர் எனப் பதவி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
10 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago