Freelancer / 2022 ஜூலை 07 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
எரிபொருள் தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கர்ப்பிணித் தாய்மார்களை பிரசவத்துக்காக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கு சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தினால் இலவச முச்சக்கர வண்டிச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார வைத்தியதிகாரி ஏ.யூ. அப்துல் சமட் இன்று வியாழக்கிழமை (07) தெரிவித்தார்.
பொத்துவில் பின்தங்கிய பிரதேசத்திலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களை பிரசவத்துக்காக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கு பல அசௌகரியங்கள் ஏற்படுவதாக அறிய முடிகின்றது. இதனை கருத்தில் கொண்டு இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பிரதேசங்களிலுள்ள மதத் தலைவர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சேவை கோமாரி கிராமத்திலிருந்து முதலாவதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளததகவும் தெரிவித்தார்.
மேலும் வாகன சேவை 1919 அவசர அம்புலன்ஸ் சேவைக்கு மேலதிகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கோமாரி, குடாக்களி, செங்காமம், ஊரணி ஆகிய பின் தங்கிய பிரதேச மக்கள் பெரும் நன்மை அடைவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இலவச வாகன வசதி தேவைப்படுபவர்கள் தத்தமது கிராம சேவை உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அத்காரி அலுவலகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026