2025 மே 15, வியாழக்கிழமை

கல்முனை பல்பொருள் அங்காடியில் தீ

Editorial   / 2020 ஜூன் 07 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கல்முனை கோயில் வீதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

.இன்று (7) பிற்பகல் 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் பல்பொருள் அங்காடி முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது.

கல்முனை  பொலிஸார், கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.

சுமார் 1 மணி நேர முயற்சி காரணமாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .