2025 மே 14, புதன்கிழமை

கல்முனை மாநகர சபைக்கு சனிட்டைஸ் அன்பளிப்பு

Editorial   / 2020 மே 31 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபைக்கு, கல்முனை சிற்றி பாமஸி நிறுவனம், கைகளை கிருமி தொற்று நீக்கம் செய்யும்  ஒரு தொகுதி சனிட்டைஸ் திரவியத்தை அன்பளிப்புச் செய்துள்ளது.

இவற்றை இந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.றாஜிஹ், மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபிடம் இன்று (31) கையளித்தார்.

இந்நிகழ்வில், மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், வேலைகள் அத்தியட்சகர் வீ.உதயகுமார், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலையிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்ற கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் நலன்களை கவனத்தில்கொண்டே இந்த சனிட்டைஸ் திரவியம் வழங்கி வைக்கப்பட்டதாக, மேற்படி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.றாஜிஹ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .