அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்படுமென, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
இக்கல்லூரிக்கு மிக நீண்ட காலமாக நிரந்தர அதிபர் ஒருவர் நியமிக்கப்படடாமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில், ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றிஸ்கான் முஹம்மட், கல்வி இராஜாங்க அமைச்சரை, கல்வி அமைச்சில் இன்று (11) சந்தித்து கலந்துரையபோதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, கடந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டன.
எனினும், கல்வி அமைச்சின் நியமனம் தாமதமடைந்ததால், சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், இதனை ஆட்சேபித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டதன் பேரில், மேற்படிக் கல்லூரி, தேசிய பாடசாலை என்பதால் அந்நியமனம் சட்டவிரோதமானதென, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வேறொருவர் தற்காலிக அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இவ்வாறான இழுபறி, முரண்பாடுகளால் இக்கல்லூரி சமூகத்தினரிடையே குழப்பகரமான சூழ்நிலை தோன்றியிருப்பதைக் கருத்தில்கொண்டு, இனியும் தாமதியாமல் கல்வி அமைச்சால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியவர்களுள் பொருத்தமான ஒருவருக்கு, அதிபர் நியமனக் கடிதத்தை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென, ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இக்கோரிக்கை தொடர்பிலான மகஜரொன்றையும், இராஜாங்க அமைச்சரிடம் அவர் கையளித்துள்ளார்.
13 minute ago
18 minute ago
26 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
26 minute ago
32 minute ago