2025 மே 14, புதன்கிழமை

கல்முனையில் 12, 717 குடும்பங்களுக்கு ரூ.5,000 விநியோகம்

Editorial   / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானியம் வழங்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் செயற்றிட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சமுர்த்திக் குடும்பங்கள், சமுர்த்தி எதிர்பாப்புப் குடும்பங்கள், சுயதொழிலை இழந்த குடும்பங்களுக்கும் தலா ஐயாயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் செயற்திட்டத்தின் கீழ், கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் பெரியநீலாவணை, மருதமுனை, நற்பிட்டிமுனை, இஸ்லாமாபாத், கல்முனைக்குடி ஆகிய கிராமங்களில் உள்ள 31 கிராசேவகர் பிரிவுகளில் வசிக்கும் 12,717 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் 60 மில்லியன் 37 இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை பிதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில், பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம், மருதமுனை, நற்பிட்டிமுனை வலய சமுர்த்தி வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.எம்.முபீன், கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் மோசஸ் புவிராஜ் ஆகியோருடன்; சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோத்ரகள், கிராம உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து பயனாளிகளுக்கான கொடுப்பனவுளை அலுவலகத்திலும், வீடு வீடாகவும் சென்று வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X