2025 மே 14, புதன்கிழமை

கல்முனையில் டெங்கு அபாயம்

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, பாறுக் ஷிஹான்

அம்பாறை, கல்முனைப் பிராந்தியத்தில் இவ்வருட ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ஆம் திகதி வரை 838 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் எனவும், இருவர் மரணமடைந்துள்ளனர் எனவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், இன்று (02) தெரிவித்தார்.

கடந்த வருடத்தை விட இவ் வருடம் 05 மாத காலத்துக்குள் டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்துக் காணப்படுவதாகவும், கடந்த சில நாள்களாக அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக, டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு, வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி, டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடங்கொடுக்காத வகையில், தமது இடங்களை துப்புரவாக வைத்து கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.

கோரோனாத் தொற்று காரணமாக, வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளதால் டெங்கு நுளம்பு அதிகமாக பரவக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .