2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கவனயீர்ப்புப் பேரணி

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 03 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்ட வெளிக்கள உத்தியோகஸ்;தர்களுக்கு இதுவரையில் வழங்கப்படாத மோட்டார் சைக்கிள்களை வழங்குமாறு கோரி கொழும்பில் எதிர்வரும் 08ஆம் திகதி கவனயீர்ப்புப் பேரணியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றையதினம் காலை 09 மணிக்கு புறக்கோட்டையிலிருந்து ஜனாதிபதி செயலகம்வரை கவனயீர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளதாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொழிற்சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆப்தீன், இன்று வியாழக்கிழமை  தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் வெளிக்களப் பணிகளில் ஈடுபடும் 06 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அரசாங்க வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X