2025 மே 05, திங்கட்கிழமை

காணாமல்போன சிறுவன் சடலமாகக் கண்டெடுப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 28 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டிலிருந்தபோது நேற்று (27) காலை காணாமல்போயிருந்த 8 வயதுச் சிறுவன், நீரில் மூழ்கி மரணித்த நிலையில், அன்றையதினம் இரவு 11 மணியளவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

நிந்தவூர், 01ஆம் பிரிவில் 196/A வன்னியார் வீதியை அண்டி வசிக்கும் மன்சூர் அய்மன் அப்துல்லாஹ் எனும் சிறுவனே, இவ்வாறு மரணித்தவராவார்.

காணாமல் போயிருந்த சிறுவனைத் தேடும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது,  நீரில் மூழ்கி மரணித்த நிலையில் நிந்தவூர் முகத்துவார பிரதேசத்தில்  கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X