2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கிழக்கில் 93 சதவீதம் பைசர் தடுப்பூசி ஏற்றல்

Editorial   / 2021 நவம்பர் 09 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் 16 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட 93 சதவீதமானவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

அத்துடன், 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு 93 சதவீதமானவர்களுக்கு முதலாவது தடுப்பூசியும் 82 சதவீதமானவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரணங்களும் சம்பவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

செப்டெம்பர் மாதத்தில் இறுதிப் பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்ட போதிலும் தற்போது அவ் எண்ணிக்கையில் சிறிதளவு குறைவு காணப்படுகின்றது. இருந்த போதிலும் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடையவில்லையெனவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தடுப்பு மருந்து ஏற்றும் பணிகள் கிரமமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .