2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிழக்கு ஆளுநராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

Editorial   / 2021 நவம்பர் 03 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சரும் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சி தலைவருமான வேதாந்தி சட்டத்தரணி எம்.எச். சேகு இஸ்ஸதீனை நியமிக்குமாறு, நட்பிட்டிமுனை பளீல் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பின் தலைவரும் கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான தேசகீர்த்தி அப்துல் கபூர், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அப்துல் கபூர் தெரிவித்துள்ளதாவது, “கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வரும் மூவின மக்களின் அன்புக்குப் பாத்திரமானவராக முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் உள்ளார்.

“இனவாதம், மதவாதம், பிரதேசவாதமற்ற மூத்த அரசியல்வாதியும் ஆவார். மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அரசியலில் ஒன்றாக பயணித்து, முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு தனித்துவ அரசியல் கட்சி தேவை என முஸ்லிம் சமூகத்தை விழிப்படையச் செய்தார். அதில் வெற்றியும் கண்டார்.

“வடகிழக்கு இணைந்த மாகாணத்தின் முதலாவது மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த காலத்தில் தமிழ் தலைவர்களுடனும் தமிழ் மக்களுடனும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து வந்தவர்.

“எனவே, கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவிக்கு இவர் மிகவும் பொருத்தமானவர் ஆவார்” என்று அக்கடிதத்தில் அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .