Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 மார்ச் 09 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில், பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் மண்டபத்தில் இப்பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.
“இம்முறை 1,958 உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரி மாணவர்களுக்கும், பட்டப்பின் தகைமை பெறுபவர்களுக்கும், கௌரவப் பட்டம் பெறுபவர்களும் தமக்கான பட்டத்தை பெறவுள்ளனர்.
“நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்வியமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கே.கபில பெரேராவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பீ.உடவத்தவும் கலந்து கொண்டு உரையாற்றுவர்.
“கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாக 1,958 மாணவர்களுக்கான பொதுப் பட்டமளிப்பு நிகழ்வு நடத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்” என்றார்.
3 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago