Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 02 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
பொத்துவில் மற்றும் பாணமை ஆகிய பிரதேசங்களில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பாணமை பிரதேசத்தில் முதல் கட்டமாக03 பாரிய கிணறுகளை நிர்மாணிக்க, நீர் வழங்கல் வசதிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளாரென, அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரி எஸ். அப்துல் ஜப்பார், இன்று (02) தெரிவித்தார்.
இந்தக் குடிநீர் கிணறுகள் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில் பொத்துவில், பாணமை ஆகிய கிராமங்களில் வாழும் மக்கள் குடிநீரைப்பெற்றுக்கொள்ளக் கூடிய அமையும்.
பொத்துவில், பாணமை ஆகிய கிராமங்களில் வாழும் மக்கள் நீண்ட காலமாக எதிர் நோக்கிவரும் குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை அபிவிருத்தி செய்து, அதனுாடாக குடிநீர் வழங்குவதற்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளததாகவும் அவர் கூறினார்.
பொத்துவில் பிரதேசத்துக்கு தேசிய நீர் விநியோக வடிகாலமைப்புச் சபையின் குறைந்தளவு நாளாந்தம் குடிநீர் வருவதால் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
43 minute ago
46 minute ago