2025 மே 14, புதன்கிழமை

கொவிட்-19 நிதிக்கு விரிவுரையாளர்கள் அன்பளிப்பு

Editorial   / 2020 மே 07 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அனைவரும் தமது ஒரு நாள் சம்பளத்தை சேகரித்து, 1.6 மில்லியன் ரூபாயை, கொவிட்-19 நிதிக்கு வழங்கியுள்ளனர்.

இதனொரு கட்டமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள இராணுவத்தினருக்கும் வைத்தியசாலைகளுக்கும் சுய பாதுகாப்பு உபகரணங்கள், தெளிகருவிகள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.

இதேவேளை, அம்பாறை தள வைத்தியசாலைக்கு சுவாசக் கருவிகள் கொள்வனவுத் திட்டத்துக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையும் கையளிக்கப்பட்டது. இதன்போது, தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X