2025 மே 14, புதன்கிழமை

‘கோவில் வழிபாடுகளில் ஐவரே பங்கேற்கலாம்’

Editorial   / 2020 மே 26 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

கோவில் வழிபாடுகளில் 5 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியுமெனத் தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன், இதனை கோவில் நிர்வாகமும் பொதுமக்களும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

கோவில் உற்சவங்கள், விசேட வழிபாடுகள் தொடர்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

 அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்

“இன்றைய சந்தர்ப்பத்தில், சமய தலங்களைத் திறந்து, மக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டாமென, சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

“ஆனாலும், கோவிலில் நடைபெறும் நாளாந்த விசேட பூஜைகளை, மக்கள் பங்களிப்பின்றி நடத்தலாம். இதன்போது, கோவில் குரு, உதவியாளர் உள்ளிட்ட 5 பேர் மாத்திரமே இருக்க முடியும். அவர்களும் சுகாதார நடைமுறையை பின்பற்றிச் செயற்பட வேண்டும்.

“இவற்றை மீறி செயற்பட்டாலோ அல்லது கோவில் வளாகத்தினுள் அதிகமான மக்கள் இருந்தாலோ அதற்கு முழுப்பொறுப்பும் கோவில் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தையும் குருக்களையும் சாரும் என்பதுடன், அவர்கள் அனைவரையும் 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டிய நிலை உருவாகும்.

“இதைத்தவிர, வழிபாடு இல்லாத சந்தர்ப்பத்தில் கோவில்களில் கூடி நிற்பதும் தண்டனைக்குரிய குற்றம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .