2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சமூக இடைவெளியுடன் பொலிஸ் விசாரணைகள்

Editorial   / 2020 மே 24 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில், சிறு குற்ற விசாரணைகள் சமூக இடைவெளியை பேணி, மர நிழலில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அண்மைக்காலமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து, சுகாதார அமைச்சு, ஜனாதிபதி செயலணி பல்வேறு சுகாதார செயற்றிட்டங்களை மக்களின் நலன் கருதி அமுல்படுத்தி வருகின்றது.

இதனடிப்படையில், நாடு பூராக உள்ள அரச, தனியார் நிறுவனங்களில் சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பாக விளக்கங்கள், பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

இதில் குறிப்பாக, கைகழுவுதல் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் என்பன அடிப்படை சுகாதார செயற்பாட்டில் கடைப்பிடிக்கப்படுவதுடன், அம்பாறை - சவளக்கடை பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸாரின் பல்வேறு பிரிவுகளிலும்  சவளக்கடை   பிரதம  பொலிஸ்  பரிசோதகர்  எம்.எம்.அஷ்ரப் தலைமையில்    முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .