2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சம்பள அதிகரிப்பு கோரி கவனயீர்ப்பு

Editorial   / 2021 நவம்பர் 29 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அரசாங்க ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அதிகரிக்க கோரி, அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று (29) கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம். கபீர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் ஈடுபட்டனர்.

“வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்து”, “அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயது 65 தீர்மானத்தை கைவிடு”, “பிரஜைகளின் கருத்துச் சுதந்திரத்தில் கை வைக்காதே” மற்றும் “அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என்ற கூற்றை விலக்கிக் கொள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை போராட்டத்தில் ஈடுபட்டோர் கையில் ஏந்தியிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X