Editorial / 2021 நவம்பர் 16 , பி.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.ஜபீர், எம்.எஸ்.எம். ஹனீபா
சம்மாந்துறை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் (பட்ஜெட்) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் 45ஆவது அமர்வு, தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில், சபா மண்டபத்தில் இன்று (16) நடைபெற்றது.
இதன்போது வழமையான சபை நடவடிக்கையைத் தொடர்ந்து தவிசாளரால் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிக் கட்சி ஆகிய 3 கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தும் 20 உறுப்பினர்களை கொண்ட சபையின் வரவு - செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த வரவு செலவுத் திட்டமானது சம்மாந்துறை பிரதேச மக்களின் பங்களிப்புடன் தேவைகளையும் நலனையும் முன்னுரிமைப்படுத்தி, மக்களின் கருத்துகளையும், துறைசார் நிபுணர்களின் ஆலோசனை அடங்கிய வரவு - செலவுத்திட்டம் என்பதால் பிரதேச சபையின் சகல உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்து, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக, தவிசாளர் தெரிவித்தார்.
24 minute ago
29 minute ago
38 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
29 minute ago
38 minute ago
52 minute ago