Editorial / 2020 ஜூன் 21 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்
தேசிய சமாதானப் பேரவையின் வழிகாட்டலின் கீழ், அட்டாளைச்சேனை சர்வ மதக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட, “பாகுபாடுகள் களைந்து அனைத்து இனத்தவர்களும் ஒற்றுமையுடன் கொரோனா வைரஸை ஒழிப்போம்” எனும் விசேட வேலைத்திட்டம், அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சர்வ மதக் குழுவின் தலைவர் ஐ.எல்.ஹாசிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சர்வ மதக் குழுவின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பிரதேசங்களிலும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது.
ஒவ்வொரு பிரதேசங்களிலும் காணப்படும் மதஸ்தலங்களின் பங்களிப்புடன், சர்வ மத தலைவர்கள், இளைஞர்கள், சமூக மட்ட முக்கியஸ்தர்கள் போன்றோரை ஒன்றிணைத்து குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
37 minute ago
40 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
40 minute ago
48 minute ago
2 hours ago