Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர பிரதேசங்களில், கொரோனா தடுப்புக்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இயங்கும் வியாபார நிலையங்கள், இராணுவத்தினரால் சீல் வைக்கப்படும் என்று, கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தர்மசேன தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகரசபை மண்டபத்தில், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் இயங்கும் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள், கடைகள் உள்ளிட்ட வியாபார நிலையங்களில், கொரோனா தடுப்புக்கான சுகாதார நடைமுறைகள் பின்பற்றாமல் உதாசீனம் செய்யப்படுவதை கடந்த நாள்களில் அவதானித்ததாகத் தெரிவித்தார்.
இப்பிரதேசங்களில் இயங்கும் வியாபார நிலையங்கள் அனைத்திலும் பொருள் கொள்வனவுக்கு வருகின்ற நுகர்வோரிடையே, கட்டாயம் ஒரு மீற்றர் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் என்றும் இதற்காக ஒவ்வொரு மீற்றருக்குமான இடத்துக்கு அடையாளம் இடப்படுவது சிறந்த ஏற்பாடாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
கை கழுவுவதற்கான ஏற்பாடு அல்லது சனிடைஸ் (ளுயnவைணைந) ஏற்பாடு கட்டாயம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கையுறை, முகக்கவசம் என்பன கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நுகர்வோர் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான இத்தகைய சுகாதார நடைமுறைகள், அனைத்து வியாபார ஸ்தலங்களிலும் அவசியம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் இதனை அவற்றின் உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இல்லையேல் விசாரணையோ, அறிவித்தலோ எதுவுமின்றி குறித்த வியாபார ஸ்தலங்கள் இராணுவத்தினரால் இழுத்து மூடப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இனிவரும் நாள்களில் இராணுவத்தினரால் இவை கடுமையாக கண்காணிக்கப்பட்டு, உதாசீனமாக செயற்படும் வியாபார ஸ்தலங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago