Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 நவம்பர் 11 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
பொத்துவில், அறுகம்பை பிரதேசத்துக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வருகை தர ஆரம்பித்துள்ளனர் என, இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜெளபர், இன்று (11) தெரிவித்தார்.
அறுகம்பை பிரதேசத்துக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வரும் தனியார் ஹெலிகொப்டர் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா பரவலையடுத்து இடை நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகொப்டர் சேவையே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு தொகுதி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய ஹெலிகொப்டர் அறுகம்பை பிரதேசத்தை சென்றடைந்ததாக அவர் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பல்வேறு கைத்தொழில்களில் ஈடுபட்டு வருபவர்களின் நளாந்த வருமானத்தை அதிகரிப்பதனூடாக நாட்டின் தேசிய வருமானத்தையும் அதிகரிக்க வாய்ப்புக் கிட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை தடைப்பட்டுள்ளதால், இதனை நம்பி வாழ்ந்து வந்த குறிப்பிட்ட ஓட்டோ சாரதிகள், பழக்கடை வர்த்தகர்கள், சுற்றுலாத் தொண்டர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago