Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 மார்ச் 02 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
சம்மாந்துறை கல்வி வலயத்தில் அதிகூடிய வருட வலயக் கல்விப் பணிப்பாளர் சேவையைப் பூர்த்திசெய்து சாதனை படைத்திருக்கும், இலங்கை கல்வி நிர்வாகசேவை தரம் 1 அதிகாரியான சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீமைப் பாராட்டும் "தடம்பதி விழா", நாளை மறுதினம் (04) நடைபெறவுள்ளது.
சம்மாந்துறை வலயம் உருவாக்கப்பட்ட 1998ஆண்டு காலப்பகுதி முதல் இதுவரை எம்.எ.எம்.சாபிதீன், ஜ.எம்.இஸதீன், எம்.ரி.எ.தௌபீக், எம்.கே.எம்.மன்சூர், எஸ்.எஸ்.அப்துல்ஜலீல் மற்றும் யு.எல்எம்.ஹாசிம் ஆகிய அறுவர் பணியாற்றியுள்ளனர்.
ஏழாவது அதிகாரியாக ஜனாப் நஜீம் 2014.03.03ஆம் திகதி பதவியேற்று, நாளையுடன் (03) எட்டு வருடமாகின்றது.
இதுவரை பணியாற்றிய ஆறு அதிகாரிகளுள் எம்.ரீ.எ.தௌபீக் 7 வருடங்கள் 10 மாதங்கள் 24 நாள்கள் தொடர்ச்சியாக பணியாற்றியுள்ளார்.
ஆக, 24வருட வரலாற்றைக் கொண்ட சம்மாந்துறை வலயத்தில் அதிகூடிய 08 வருடங்களைத்தாண்டி பல சாதனைகளைப் படைத்து சேவையாற்றிவருகின்ற ஒரேயொரு கல்வி நிர்வாகசேவை அதிகாரி ஜனாப் நஜீம் ஆவார்.
எனவே, அவரது தடம்பதித்த சேவையைப் பாராட்டி, நாளை வெள்ளிக்கிழமை கல்விசார் உத்தியோகத்தர்கள் "தடம்பதி விழாவை "பணிமனையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார்கள்.
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago