2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜப்பானில் தொழில் என பண மோசடி; நபருக்கு விளக்கமறியல்

Editorial   / 2021 நவம்பர் 15 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

ஜப்பான் நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றி பணம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை, இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று  நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம். ஹம்சா, நேற்று (14) உத்தரவிட்டார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே, மேற்படி குற்றச்சாட்டில் சனிக்கிழமை (13) கைதுசெய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பணம் கொடுத்து ஏமாற்றப்பட்ட அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களைச் சேர்ந்த 06 பேர், பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பணத்தை நேரடியாகவும், வங்கிக் கணக்கினூடாகவும் செலுத்தியதாகவும் முறைப்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, அக்கரைப்பற்று  நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம். ஹம்சா முன்னிலையில் ஆஜர் செய்த போதே, இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார் எனவும் அவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .