Editorial / 2021 நவம்பர் 08 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த 25 வீட்டு உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன் தெரிவித்தார்.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் விசேட வேலைத்திட்டம், இன்று (08) முதல் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இன்று சுமார் 300 வீடுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்ட 25 வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஒரு வார காலத்துக்குள் துப்புரவு செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும், தெரிவித்தார்.
ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களிலும் டெங்கொழிப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், தெரிவித்தார்.
தற்போது பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால், டெங்கு நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப் புறச் சூழலை பொதுமக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமெனவும், பிரதேச சுகாதார வைத்தியதிகாரி கேட்டுள்ளார்.
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025