Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 நவம்பர் 03 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை சம்மாந்துறை பிரதேச சபையும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து முன்னெடுத்துள்ளன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான செயலணியின் கூட்ட தீர்மானத்துக்கமைய, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாடின் வழிகாட்டலில், இந்த டெங்கொழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்போது, மழையுடன் கூடிய வானிலை காணப்படுவதால் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்கள், டயர்கள், யோக்கட் கப், சிரட்டைகள், மட்டைகள், பிளாஸ்டிக் கொள்கலங்கள் சேகரிக்கப்பட்டதுடன், நீர்தேங்கியுள்ள இடங்களும் துப்புரவு செய்யப்படுகின்றன.
சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் தலைமையில் நடைபெறும் இவ்வேலைத் திட்டத்தில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.றாசீக், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச, சபையின் மேற்பார்வை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago