Janu / 2024 மே 05 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, பதியத்தலாவை பிரதேசத்தில் இராணுவசிப்பாய் ஒருவரின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் மீது இராணுவசிப்பாய் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை (3) இரவு இடம்பெற்றுள்ளது .
தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கும் ,குறித்த இராணுவச் சிப்பாயின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட காதலையடுத்து வெள்ளிக்கிழமை (3) இரவு பெண்ணின் வீட்டிற்கு , பொலிஸ் அதிகாரி சென்றிருந்த நிலையில் அங்கு வந்த இராணுவச் சிப்பாய் தனது மனைவி மற்றும் பொலிஸ் அதிகாரி மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் .
தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மகியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர், பொலிஸ் அதிகாரி மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்நிலையில் , தாக்குதலை மேற்கொண்ட இராணுவ சிப்பாய் மகியங்கனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன் , அவரை கைது செய்த பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கனகராசா சரவணன்
8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025