2025 மே 15, வியாழக்கிழமை

‘தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை’

Editorial   / 2020 மே 24 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

வெளி மாவட்டங்களில் இருந்து பணிக்குத் திரும்பிய அரச, தனியார் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லையென,   கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார்.

எனினும், பாதுகாப்பு வலயத்திலுள்ள மாவட்டங்களிலிருந்து  வரும் அரச, தனியார் உத்தியோகத்தர்கள்  தங்களை சுய கட்டுப்பாட்டுடன்,  பொதுச் சுகாதார பழக்கவழக்கங்களுடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு, நேற்று (23)  நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .