Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
கல்முனை, திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவகப் பிரிவில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகானகாந்தன் தெரிவித்தார்.
திருக்கோவில், தம்பட்டை கிராமத்தைச் சேர்ந்த 60 வயது ஆண் ஒருவரே, கொவிட் தொற்றுக் காரணமாக, அக்கரைப்பற்று கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (03) இவ்வாறு மரணமடைந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள 13 பிரதேச சுகாதார வைத்தி அதிகாரப் பிரிகளில், திருக்கோவிலில் இதுவரை காலமும் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்த வீதத்தில் இருந்த போதிலும் தற்போது முதலாவது கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
இந்நிலையில், திருக்கோவில் பிரதேசத்தில் தற்போது கொரோனா தொற்று வீதம் அதிகரித்துச் செல்லும் நிலையில், தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளத் தவறியவர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதுடன் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களும் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து, கொரோனா தொற்றால் ஏற்படும் மரணத்தை தடுக்குமாறு, வைத்திய அதிகாரி, திருக்கோவில் பிரதேச மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
8 minute ago
14 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
4 hours ago
5 hours ago